அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது, மாளிகைக்ககாடுத் துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகில் மீன்பிடிக்காகச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களையும் கண்டுபிடித்து, மீட்க உதவுமாறு, கடற்படைத் தளபதி, கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி, சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதீன், இஸ்மாலெப்பை ஹரீஸ், காரைதீவை சேர்ந்த சண்முகம் சிறிகிருஷ்ணன் ஆகிய மீனவர்கள், மாளிகைக்காடு துறையில் இருந்து இயந்திரப்படகு ஒன்றில் மீன்பிடிக்காகக் கடலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் ஆறு நாள்களாகியும் இன்னும் கரை திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து, அவர் கடற்படைத் தளபதி, கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்புகொண்டு, இச்சம்பவத்தைத் தெரியப்படுத்தியுள்ளதுடன், அவசரமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடித்து, மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago