2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீன் தாக்கி மீனவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 மே 08 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், சகா

அம்பாறை, காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய சொறி மீனிடம் (Jellyfish) அகப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான மீனவர் ஒருவர், இன்று (08) காலை உயிரிழந்துள்ளார்.

காரைதீவு 8ஆம் பிரிவைச் சேர்ந்த மூன்று  பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் ஜெயரஞ்சன் (வயது -51) எனும் மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சக மீனவர்களுடன் இணைந்து மீன்பிடியில் ஈடுபட்ட பின்னர், கடற்கரையில் இருந்து  100 மீற்றர் தூரத்தில் படகில் இருந்து கடலில் இறங்கி வலையை சரி செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு வலையை சரி செய்ய கடலுக்குள் இறங்கிய மீனவரை, சொறி மீன் தாக்கியுள்ளது. அதனையடுத்து, சக மீனவர்களால் மீட்கப்பட்டு, காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் மீனவர் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மீனவரின் நெஞ்சுப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான அடையாளங்கள் காணப்படுவதாக  சம்பவ இடத்துக்கு  வருகை தந்த காரைதீவு தவிசாளர்  கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார.

உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .