Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 20 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ஹஸ்பர் ஏ ஹலீம், ரீ.கே.றஹ்மத்தல்லா
அம்பாறை ஒலுவில் வர்த்தக துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, கப்பல் துறை துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக நிர்மாணிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு, ஒலுவில் துறைமுகக் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்யும்பட்சத்தில், அதிநவீன மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதன் மூலம், நாட்டுக்கு அண்ணியச் செலாவனியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
துறைமுக நுழைவாயிலை மூடியுள்ள மண்ணை அகற்றுவதன் மூலம், ஒலுவில் பிரதேசத்தில் மீண்டும் பாரிய கடலரிப்பு அபாயம் ஏற்படுமெனவும், இந்த மணலை அகற்ற வேண்டாமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதற்கு அமைவாக, மணலை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மணலை அகற்றுவதற்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும் இத் துறைமுக நிர்மாணம் சரியான முறையில் நிர்மாணிக்கப்படாமையால் மக்கள் பாரிய பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கான நிரந்தர தீர்வு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .