2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீன்பிடி தோணிக்கு தீ வைப்பு

Princiya Dixci   / 2022 மே 10 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

பெரியநீலாவணை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கரைவலைத் தோணி ஒன்று, இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

பெரியநீலாவணை 1பீயை சேர்ந்த சிவலிங்கம் தனுஜன் என்பவருக்கு செந்தமான தோணியே, நேற்றிரவு (09) 11 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தோணி தீப்பற்றி எரிவதைக் கண்டவர்கள், அதன் உரிமையாளரின் வீட்டுக்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். தனது உறவினர்களின் உதவியுடன் கடற்கரைக்கு விரைந்த தோணி உரிமையாளர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் இன்று (10) அதிகாலை 01 மணியளவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள்.

இந்தச் சம்பவத்தால் தோணிக்கு அருகிலிருந்த மீன்பிடி உபகரணங்கள் பல முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன், கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சுமார் 100 மீனவர் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயமாக பொலிஸாரோ அல்லது பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம சேவையாளரோ சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக சமூகமளிக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .