Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட மீன்பிடிச் சங்கங்களை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று (31) விஜயம் செய்து, அப்பகுதி வாழ் மீனவக் குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் கல்முனையில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்துக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.பி விக்ரமஆராய்ச்சியைச் சந்தித்து, மீனவ சங்கங்களின் வாழ்வாதாரம், பிரச்சினை, கடன் வசதி, மானிய முறையில் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவ்விடத்தில் இருந்து தொலைபேசியூடாக, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாவைத் தொடர்புகொண்டு, அம்பாறை மாவட்ட மீனவர்களின் நலன்புரித் திட்டம், இறங்குதுறை அமைத்தல், மீனவ ஒய்வு அறைகள் அமைப்பது தொடர்பாக உரையாடியதுடன், தற்போது இயங்கும் மாவட்டத் திணைக்களத்தின் பௌதீக வளப் பற்றாக்குறையையும் தீர்த்து வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது அமைச்சர் பதிலளிக்கையில், மிக விரைவில் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் அவ்வாறு வரும்போது மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago