எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை – ஒலுவில், அஷ்ரப் நகரிலுள்ள மீள் குடியேற்றக் கிராமத்தில் வைத்தியசாலையை ஆரம்பிக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்க்கு இன்று (09) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒலுவிலில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 60 குடும்பங்கள், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
அஷ்ரப் நகரை அண்டிய ஹிறா நகர், ஆலிம்சேனை போன்ற பிரதேசங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு திடீரென நோய் ஏற்பட்டால் சுமார் 07 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஒலுவில், பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரென, அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகளும் இல்லாத இப்பிரதேசத்தில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு, உயிர் ஆபத்தும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, புதிய ஆளநராகக் கடமையேற்றுள்ள நீங்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, இப்பிரதேச மக்களின் நன்மை கருதி, வைத்தியசாலையொன்றை ஆரம்பிக்குமாறு, மகஜரில் குறிப்பிடப்படுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago