Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 மார்ச் 21 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேரையும், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி இரவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது-11 ஆம் பிரிவுக்கான குழுக்கூட்டம், சாய்ந்தமருது தைக்கா வடக்கு வீதியில் அமைந்துள்ள பிரதேச அமைப்பாளரான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் வீட்டில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, அவ்வீட்டுக்கு முன்னால் கூடிய சிலர், அக்கூட்டத்தைக் குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதனால் வீட்டின் கதவு, ஜன்னல்கள் சேதமடைந்திருந்தன.
இது தொடர்பாக அமைப்பாளர், கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், சி.சி.டி.வி ஒளிப்பதிவையும் சமர்ப்பித்திருந்தார்.
முறைப்பாட்டின் பேரில் பொலிஸாரால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வழக்கு, நீதவான் என்.எம்.றிஸ்வான் முன்னிலையில் இன்று (21) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இபோது, குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு, அவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதவான், அவர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஏழு பேரில் இருவர், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago