Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் வாகனமும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் வீடு என்பன, நேற்று முன்தினம் (10) இரவு தாக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த வீட்டின் கதவு, ஜன்னல்களும் வாகனத்தின் பின் கண்ணாடியும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் இருவரும், கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு, வீட்டுக்குச் சேதம் விளைவித்தோர் சி.சி.டி.வி. மூலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இவர்களது பெயர் விவரங்களை பொலிஸாருக்கு வழங்கியிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக தனது வாகனம் தாக்கப்பட்ட சம்பவமானது தனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவை ஒருபோதும் பாதிக்காது என்று, சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago