2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முகத்துவாரத்தில் ஆணின் சடலம் கரையொதுங்கியது

Editorial   / 2018 ஜனவரி 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம், கோரைக்களப்பு முகத்துவாரம் பகுதியில் இன்று (09) காலை ஆணின் சடலமொன்று, கரையொதுங்கியுள்ளதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைப் பொலிஸார் மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பிலுவில் 01 வில்லியம்பிள்ளை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வைரமுத்து கருணாநிதி (வயது 49) என, உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேசன் தொழிலுக்காக தனது வீட்டிலிருந்து நேற்று (08) புறப்பட்டுச் சென்றிருந்த இவர், இரவு வரை வீடு திரும்பாத நிலையில், இன்று சடலமாகக் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் கால்களில் மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தங்கூசீ நூல்கள் காணப்படுவதுடன், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .