Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ்
உலக பொறியியல் தின நிகழ்வு, “நிலையான அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் முதற்தடவையாக நாளை (04) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனத்தின் (IESL) ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜாவின் வழிநடத்தலில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது, “நிலையான வளர்ச்சி இலக்குகள், பொறியியலாளர்களின் பங்களிப்பு” எனும் தலைப்பில், சிரேஷ்ட பொறியியலாளர்களால் குழுக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி சிரேஷ்ட பொறியியலாளர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைதீன், ஹைரு குறூப் நிறுவனத்தின் தவிசாளர் சிரேஷ்ட பொறியியலாளர் இஸட்.எம். ஹைரு, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் சிரேஷ்ட பொறியியலாளர் ஏ.எல்.எம்.நிசார் உள்ளிட்ட பொறியியல் பீட விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
39 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
52 minute ago