2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முதியோருக்கான உதவிகள் வழங்கப்பட்டன

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக அபிவிருத்திக்கான முதியோர் மேம்பாட்டுப் பிரிவினால் முதியோருக்கான கட்டில் மெத்தைகள், இன்று (19) வழங்கப்பட்டதுடன், மலசலக்கூட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

முதியோர், தங்களது வீடுகளில் உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்கும் முதியோருக்கான தேசிய செயலகத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம். கையிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், கணக்காளர் எம்.றிபாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய முதியோர் தினத்தை முன்னிட்டு, தேசிய முதியோர் செயலகம், சமூக சேவைத் திணைக்களம், மாவட்டச் செயலகம் ஆகிய இணைந்து, முதியோருக்கான பல்வேறு உதவித்திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X