Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவில் ஜீவசமாதியடைந்த சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 68ஆவது வருடாந்த குருபூஜை தினத்தையொட்டி நேற்றுமுன்தினம் (5) திங்களிரவு சித்தரின் முத்துச்சப்பற ஊர்வலம், காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி கோயில் பரிபாலன சபைத் தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் கொம்புச்சந்தியில் வைத்து தேங்காய் உடைக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
கோயிலிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் காரைதீவின் தேரோடும் வீதிவழியாகச் சென்று அதிகாலையில் மீண்டும் கோயிலைச்சென்றடைந்தது. இதேவேளை, 6ஆம் திகதி நேற்று கோமாதா பூஜை அன்னதானம் திருவிளக்குப்பூஜை என்பன நடைபெற்றன.(7) புதன்கிழமை காலை 7மணிக்கு பாற்குடபவனியைத் தொடர்ந்து 10மணியளவில் கோயிலில் 51 கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்று 12மணிக்கு சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றது.மேலும் கோயிலில் புதிதாக போடப்பட்ட கொங்கிறீட் பாதையும் சுவாமிகள் நீராடிய கிணறும் திறந்துவைக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago