2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘முன்கல்வித் துறைக்கான அரச நிதிகளில் பின்னடைவு’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஒவ்வொரு வருடமும் கல்வித்துறைக்காக அரசாங்கம் அதிகளவு நிதியொதுக்கீடு செய்த போதிலும், முன்கல்வித் துறைக்கான அரச நிதிகள் மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளதாக, கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடங்களுக்கு இன்று (09) மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் முன்பள்ளித்துறையை மேம்படுத்துவதற்காகவும், விரிவுபடுத்துவதற்காகவும் போதிய அரச நிதி தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வித் துறையில் பாரிய பிரச்சினைகள் உள்ளதாகவும் அவற்றுக்கு முடிந்தளவு மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள்  பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

13ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தில், முன்பள்ளிகளுக்கான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை தேசிய கல்விக் ஆணைக்குழுவால் முன்பள்ளி கல்வி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய கொள்கையை அமுல்படுத்துவதன் ஊடாகவே  சமகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காணலாம் என்றார்.  

கிழக்கு மாகாண 1,661 முன்பள்ளிகளில், 5,000 முன்பள்ளி ஆசிரியர்கள் 54,185 மாணவர்களுக்குப் பணியாற்றி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X