Princiya Dixci / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் முன்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் செயற்றிட்டம், தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட "குறைந்த நிறையைக் கொண்ட சிறுவர்கள் கூடுதல் வீதமானோர் கல்வி பயிலும் பாலர் பாடசாலைகள்" என்ற அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 14 முன்பள்ளிகளுக்கு இவ்வருடம் காலை உணவு வழங்கும் செயற்றிட்டம் நடைமுறையில் உள்ளது.
அதற்கு மேலதிகமாக Unicef நிறுவனத்தின் அனுசரணையில் மேலதிகமாக 08 முன்பள்ளி நிலையங்களுக்கு காலை உணவு வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் வினியோகஸ்த்தர்களை தெரிவு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கான உணவுச் சுகாதாரம் தொடர்பான செயலமர்வு, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முஹம்மட் இம்டாட்டின் நெறிப்படுத்தலில், நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜமீல் தலைமையில், இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்செயற்றிட்டத்தின் பிரதான விடயங்களான உணவு தயாரிப்பு, உணவுச் சுகாதாரம் தொடர்பான செயலமர்வுக்கு வளவாளராக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜௌஸ் கலந்துகொண்டு, ஆலோசனைகள், வழிகாட்டல்களையும் வழங்கினார்.
2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025