2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்பிள்ளைப்பருவ செயற்றிட்டத்தின் கீழ், மகளிர் அபிவிருத்தி, சிறுவர் விவகார அமைச்சால், அம்பாறை மாவட்ட முன்பள்ளிகளுக்கான உபகரணங்கள், கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கான பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இச்செயற்றிட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேசத்தில், முதற்கட்டமாக நான்கு முன்பள்ளிகளுக்கான உபகரணங்கள், பொருள்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (29) வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அப்துல் கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், சமூக சேவைப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கே.எம்.அன்சார், காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X