ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபையிடம் இருக்கின்ற அதிகாரத்தினூடாக வழங்கப்பட்ட முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் நடவடிக்கைகளை சிலர் மலினப்படுத்தி, இப்பணியகத்தை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது விடயமாக அவர் இன்று (03) ஊடகளுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவை 5,000ரூபாயாக அதிகரித்து வழங்குவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் கல்விச் சேவையை மேம்படுத்துவதற்கும் உதவ முன்வர வேண்டுமென்றார்.
அத்துடன், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் ஆட்சேர்ப்பு பிரமாணக் குறிப்பு நியதிச் சட்ட திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago