Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 14 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அண்மைக்காலமாக இந்த நாட்டில் முஸ்லிம்களை இலக்கு வைத்து, அவர்களின் பொருளாதாரத்தை நசுக்க இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள சதித்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'கடந்த காலத்தை விட, இந்தக்; ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை நசுக்குவதற்கு இனவாதிகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றார்கள்.
'இதனால், முஸ்லிம் சமூகம் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், அச்சமூகத்துக்கு பொருளாதார ரீதியாகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என்றார்.
'அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இது கண்டிக்கத்தக்க விடயமாகும். இது தொடர்ந்துகொண்டு செல்லுமாயின், நாட்டில் பாரிய விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
'இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனியாக அரசாங்கத்தில் இருந்துகொண்டு, பொலிஸார் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் குற்றஞ்சாட்டுவதும் சுமத்துவதும் எந்த வகையிலும் தீர்வாக அமையாது. இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத்; தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலக்கெடு வழங்க வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாமல் விட்டால், எதிர்க்கட்சியில் அமர்ந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்' என்றார்.
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago