2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூன்றாவது தடவையாகவும் பீடாதிபதியாக மஸாஹிர்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென் கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரென, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று (27) தெரிவித்தார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையாகவும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

பீடாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட பீட சபைக் கூட்டத்திலேயே இவர் மூன்றாவது தடவையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அடுத்த மூன்று ஆண்டுகள் பீடத்தின் பீடாதிபதியாக தொழிற்படுவாரெனவும் உபவேந்தர் தெரிவித்தார்.

பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் கடந்த ஆறு ஆண்டுகளாக பீடத்தின் அதி துரித வளர்ச்சிக்கு மிகக் காத்திரமான பல பங்களிப்புகளை வழங்கியதோடு, ஜாமிஆ நளீமிய்யா கலா பீடத்தின் பட்டதாரியான இவர், தனது விசேட கலைமாணி மற்றும் முதுதத்துவமாணிப் பட்டங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தை மலேசியாவிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .