Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அன்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு, ஐக்கிய விவசாய அமைப்பின் தலைவர் எம்.ஐ.அபூசஹீட், அரசாங்கத்திடம், இன்று (24) வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக மேலும் குறிப்பிட்ட அவர், "உலகெங்கிலும், மே மாதம் முதலாம் திகதியே, தொழிலாளர்கள் தினமாக, காலம்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த விடுமுறை தினத்தை மாற்றுவது, வரலாற்றை மாற்றுவதற்கு சமனானது; தொழிலாளர்களின் உரிமைகளில் தலையிடும் ஒரு விடயம்" என்று குறிப்பிட்டார்
எனவே, மே மாதம் முதலாம் திகதியை, வழமைபோன்று அனுஷ்டிப்பதற்கு, அன்றைய தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டும் என்று அவர் கோரினார்.
இதேவேளை, அரசியல் ரீதியான அல்லது வேறு காரணங்களுக்காக, ஒரு சர்வதேச தினத்தை மாற்றுவது, தொழிலாளர்களுக்கிடையே பாரிய பிரச்சினையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
21 minute ago
33 minute ago
42 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
42 minute ago
58 minute ago