Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 மார்ச் 26 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் மேட்டு நிலக் காணிகளில் சிறுபோக நெற்செய்கை விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாமென, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளார் ரீ. மயூரன் அறிவித்துள்ளார்.
அம்பாறை - டி.எஸ். சேனநாயக்கா சமுத்திரத்தில் தற்போது 03 இலட்சத்து 70 ஆயிரம் அடி நீர் மாத்திரம் உள்ளதாகவும் இந்த நீர், சுமார் 70 ஆயிரம் ஏக்கர் காணிகளின் நீர்ப்பாசனத்துக்கு மாத்திரம் போதுமானதாகவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
எனவே, சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளுக்கு, ஏப்ரல் 01ஆம் திகதி முதல் இரு வாரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில், நீர் விநியோகிக்கப்படுமெனவும், விதைப்புப் பணிகளை, ஏப்ரல் 05ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று நீர்ப்பாசப் பிரிவில் 07 ஆயிரத்து 788 ஏக்கரிலும், தீகவாபி நீர்ப்பாசனப் பிரிவில் 06 ஆயிரத்து 412 ஏக்கரிலும், இலுக்குச் சேனை நீர்ப்பாசனப் பிரிவில் 09 ஆயிரத்து 800 ஏக்கரிலும் நெற்செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago