Princiya Dixci / 2021 மார்ச் 23 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவிருக்கின்றன.
முதலாம் கட்டத்தில் 6 பாடசாலைகளும் இரண்டாம் கட்டத்தில் 18 பாடசாலைகளும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும், இரண்டு கட்டங்களிலுள்ள பாடசாலைகள் ஏக காலத்திலேயே அமுலுக்கு வரும் வகையில் செயற்பாடுகள் நடந்தேறிவருகின்றன.
முதலாம் கட்டத்தில், கல்முனை வலயத்தில் அருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியும் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயமும் லாகுகலை வலயத்தில் பாணமை மகா வித்தியாலயமும் தமன வலயத்தில் மடவளாந்த மகா வித்தியாலயமும் மகாஓய வலயத்தில் கெப்பிட்டிபொல மகா வித்தியாலயமும் தெரிவாகியுள்ளன.
இரண்டாம் கட்டத்தில், அக்கரைப்பற்று வலயத்தில் ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயமும் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலயமும் அஸ்ஷிறாஜ் மகளிர் வித்தியாலயமும் பொத்துவில் அல்இர்பான் மகளிர் வித்தியாலயமும் கல்முனை வலயத்தில் மருதமுனை ஷம்ஸ் மகாவித்தியாலயமும் உவெஸ்லி உயர்தர பாடசாலையும் கல்முனை மகுமுத் மகளிர் கல்லூரியும் அல்பகுரியா மகா வித்தியாலயமும் நிந்தவூர் அல்மஸ்ஹர் மகா வித்தியாலயமும் தெரிவாகியுள்ளன.
அத்துடன், சம்மாந்துறை வலயத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயமும் அல்அர்ஷத் மகா வித்தியாலயமும் நாவிதன்வெளி சாளம்பைக்கேணி அஸ்ஷிறாஜ் மகா வித்தியாலயமும் ஏனைய 6 சிங்கள பாடசாலைகளும் தெரிவாகியுள்ளன.
மத்திய கல்வியமைச்சின் உயரதிகாரிகள் குழுவினர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அடங்கிய கூட்டமொன்று, திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில், இன்று (23) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பாடசாலைகள் அங்கிகரிக்கப்பட்டன.
27 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago