ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை, பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில், விளையாட்டு மைதானமொன்றை அமைத்துத் தருமாறுகோரி, அப்பிரதேச விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் ஒன்றிணைந்து இன்று (23) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
சுமார் 1050 குடும்பங்கள் வாழ்ந்துவரும் இக்கிராமத்தில், 12க்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள், பல இளைஞர் கழகங்கள் இயங்கிவருகின்ற நிலையில், மிக நீண்டகாலமாக விளையாட்டு மைதானமொன்று அமையப்பெறாமையானது, பாரிய குறைபாடகவே இருந்துவருவதாக மாவடிப்பள்ளி சமூக அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.அமீன் தெரிவித்தார்.
மேலும், இக்குறைப்பாடு தொடர்பாக, உரிய அதிகாரிகள், பிரதேச சபை, அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026