2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மைதானம் தொடர்பில் மகஜர் கையளிப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது, வொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்களின்  பிரதிநிதிகள்,  கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சாரிடம் இன்று (26) மகஜர் கையளித்தனர்.

குறித்த மைதானத்துக்கான சுற்றுமதில் இல்லாததன் காரணமாக,  வாகனங்களதும் கால்நடைகளதும் நடமாட்டம் அதிகரித்து மைதானம் சீர்குலைந்து காணப்படுவதாக, மேற்படி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, மைதானத்தில் மின்சார வசதியின்மையால் இரவு நேரங்களில் பல்வேறு ட்ட சமூகவிரோதச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் மாநகர ஆணையாளரிடம் அவர்கள் எடுத்துக்கூறினர்.

எனவே, மைதானத்துக்கான மின்சார இணைப்புகளை வழங்குவதுடன், காவலாளி ஒருவரை நியமிக்குமாறும் மைதானத்துக்கான சுற்றுமதில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும், கல்முனை மாநகர ஆணையாளரிடம் கழகப் பிரதிநிதிகள் கையளித்த மகஜர் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படிக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக, ஆணையாளர் இதன்போது வாக்குறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .