Editorial / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்
அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் நேற்று முன்தினம் (24) இரவு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதனால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவினைச் சேர்ந்த 52 வயதுடைய ஆதம்லெவ்வை முகம்மது லாபீர் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
சாகாமம் வீதியில் இரவுக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்த ஆறுவர் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், ரோந்து நடவடிக்கையில் இரவு 9.45 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வருவதைக் கண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
அதனைப் பொருட்படுத்தாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதுண்டதனால் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மோட்டார் செலுத்தி வந்த சந்தேக நபர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் அம்பாறை தடவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சமூகமளித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago