2025 மே 03, சனிக்கிழமை

யானையின் தாக்குதலால் இருவர் படுகாயம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூலை 22 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு, பட்டிமோடு வயல் பிரதேசத்தில் இன்று (22) அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளான இரு விவசாயிகள் பலத்த காயங்களுடன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம், பட்டிமோடு பச்சயடி வட்டை எனும் இடத்தில் அதிகாலை 02.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், நெற்காணியில் காவல் பணியில் இருந்த விவசாயிகள் நால்வரில் இருவரை யானைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், மற்றைய இருவரும் அங்கிருந்து ஓடி தப்பியுள்ளனர் எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X