2025 மே 15, வியாழக்கிழமை

ரூ5,000 இரண்டாம் கட்ட கொடுப்பனவு ஆரம்பம்

Editorial   / 2020 மே 19 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  , எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, நேற்று (18) முதல் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எச்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.

இதனூடாக, மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முத்திரை பெறுவோர், சமுர்த்தி முத்திரைக்கு தகுதியானோர், தொழில் பாதிப்பு, மேன்முறையீடுப் பட்டியலில் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 173,368 குடும்பங்களுக்கு, 860 மில்லியன் 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, அவர் கூறினார்.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளாலும், இக்கொடுப்பனவுகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் கே.லவநாதன், தலைமையக  சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன், வங்கி முகாமையாளர்களான எம்.கண்ணதாசன், கே.அசோக்குமார் ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆலையடிவேம்பில் மாத்திரம் 6,987 குடும்பங்களுக்கு, 30 மில்லியன் கோடியே 49 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இந்தக் கொடுப்பனவுகள் யாவும் இம்மாதம் 29ஆம் திகதி வரை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளும் சிறந்த முறையில் சமுர்த்தி வங்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த இரண்டாம் கட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல் தலைமையில், நேற்று விநியோகிக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .