Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கல்முனை கடைத்தெருவில் போதையூட்டப்பட்ட 24 கிலோ 300 கிராம் கொண்ட 1,650 பக்கெற்றுக்களில் பொதி செய்யப்பட்ட லேகியத்தை ஏற்றி வந்து கடைகளில் விற்பனைக்காக விநியோகித்துக் கொண்டிருந்த நபரொருவரை கல்முனைப் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை(20) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மொனராகலை,கந்த உடபங்குவ, 7ஆம் கட்டையைச் சேர்ந்த தெல்கம விதானகே சமந்த (வயது 46) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வாகனத்தையும் போதை லேகியத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நீண்ட காலமாக போதையூட்டப்பட்ட லேகிய விற்பனையில் ஈடபட்டு வருவதாகவும் இந்த லேகியத்தை மாணவர்கள் பாவிப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
28 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
1 hours ago