2025 மே 19, திங்கட்கிழமை

லொறி தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எஸ்.சபேசன்

அம்பாறை, நாவிதன்வெளி 15ஆம் கொலனிப் பகுதியில் கடையொன்றுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ராட்டா ரக லொறி,  இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேளாண்மைச் செய்கைக்கான உரம் உள்ளிட்டவை விற்பனை செய்யும் குறித்த கடை உரிமையாளரின் ராட்டா ரக லொறியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வழமைபோன்று நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த லொறியை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு கடையையும் பூட்டிவிட்டுச்; சென்றதாகவும் இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த லொறி தீப்பிடித்து எரிவதாக தொலைபேசி மூலம் லொறி உரிமையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்நிலையில், குறித்த இடத்துக்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X