Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை. திருக்கோவில் பிரதேசத்தில் சமூக சேவைகள் அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விசேட தேவையுடையோர்களுக்கான அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சக்கர கதிரைகள் இன்று செவ்வாய்க்கிழமை பயனாளிகளின் உறவினர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இச் சக்கர கதிரைகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்,உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் சமூக சேவைப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாஸ்கரன் ஆகியேர் வழங்கி வைத்துள்ளனர்.
இதேவேளை, இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நுறு வயதை பூர்த்தி செய்த தம்பிலுவில் 2ம் பிரிவிவைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக பத்தாயிரம் ரூபாய் காசோலையும் உதவிப் பணமாக வழங்கப்பட்டது.
இதனை பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் கிராம சேவகர் எஸ்.பார்த்தீபன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago