2025 மே 17, சனிக்கிழமை

விஜேதாச ராஜபக்ஷவின் கருத்து: இனவாதிகளுக்கு தீனி போட்டு விட்டது

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

“நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ  நாடாளுமன்றத்தில் இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஆற்றிய உரை இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல அமைந்துள்ளது” என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  ஆரம்பக் கல்வி கற்றல் வள நிலையம் மற்றும் ஆசிரியர் விடுதிகளுக்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு, சனிக்கிழமை (19) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில், புலனாய்வுத்துறையினரே நிராகரித்த கருத்தொன்றை நாட்டின் உயரிய சபையில் முன்வைத்திருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்படுகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

அத்துடன், உலகில் முதன் முதலாக தீவிரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பியது இஸ்லாம் மார்க்கமே என்ற வரலாற்று உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக  தெரிவிக்கப்படும் கருத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வாபஸ் பெற வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .