2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விஞ்ஞான நூலக சேவைகள் அங்குரார்ப்பணம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள விஞ்ஞான நூலக சேவைகள், பிரயோக விஞ்ஞான பீட புதிய நிருவாகக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (23) மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விஞ்ஞான நூலகத்தை வைபவ ரீதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் திறந்து வைத்தார்.
இப்புதிய நூலகத்தில் முதலாவது அங்கத்தவராக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அத்துடன் புத்தகம் ஒன்றும் இரவல் வழங்கப்பட்டு நூலக சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு விசேடஅதிதிகளாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா, பதில் நிதியாளர் கே.எல்.எம்.நசீர் ஆகியோரும் பல்கலைக்கழக நிர்வாக உயர் அதிகாரிகளும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விஞ்ஞான நூலகம் பிரயோக விஞ்ஞானபீடத்தின் பாடவிதானத்துக்குட்பட்ட ஏறக்குறைய 25,000 நூல்களையும்  தேவையான பொது அறிவு, பொழுதுபோக்குசார்ந்த நூல்களையும், இரசாயனவியலில் தந்தை என வர்ணிக்கப்படும் பேராசிரியர் சுல்தான் பாவா அரிய சேகரிப்புகளையும் கொண்டிருப்பதுடன், பல நவீன வசதிகளையும் இலத்திரனியல் வளங்களையும் கொண்டுள்ளது என்றும் வாசகர் உதவிசேவைகள் மூலம் நூலகவளங்களின் பாவனையை அதிகரிப்பதே நோக்கமென நூலகர் எம்.எம். றிபாயுதீன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X