2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை அல் - முனீறா பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 2016ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு புதிய மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பாடசாலையின் பிரதிஅதிபர் ஐ.எம்.பாஹிம் தெரிவித்தார்.

புதிய மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் யாவும் பாடசாலை காரியாலயத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.விண்ணப்பிக்க விரும்புவோர் தமது விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலதிக தகவல்களை பாடசாலை நேரத்தில் நேரடியாகவோ அல்லது 077-9141793 எனும் அலைபேசி ஊடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X