2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், கே.எல்.ரி.யுதாஜித், பதுர்தீன் சியானா

கண்டி, கொழும்பு மாவட்ட இளம் குருந்திரைப்பட வீடியோ தயாரிப்பாளர்கள் மற்றும் புகைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வீடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகமாகப் பயன்படுத்தி, பின் தங்கிய மக்களின் கதைகளை வெளி உலகுக்கு எடுத்துக்கூறி, அச்சமூகத்தினை வலுப்படுத்தும் உத்தி முறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது.

இத்தகைய கதை கூறல் மற்றும் புகைப்படங்கள் மூலம் பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை குறுந்திரைக் கதைகளாக மற்றும் புகைப்படங்களாக உருவாக்கலாம்.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றமானது பேராதனை பல்கலைக்கழக விவசாயபட்டப்படிப்பு நிறுவகத்துடன் இணைந்து முதற் கட்டமாக இச் செயற்றிட்டத்தினை மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மிகவெற்றிகரமாக கடந்த வருடம் அமுல்படுத்தியது.

இதன் அடுத்த கட்டமாக கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மீண்டும் இச் செயற்திட்டத்தை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

18-30 வயதுக்கு இடைப்பட்டதகுதிவாய்ந்தஇளைஞர்இயுவதிகள் இந்த இலவச செயற்திட்டத்தில்  பங்குபெறலாம். இப் பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்ப்படும்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னராக உங்கள் விண்ணப்பங்களை infoShLDJF.org என்ற மின்னஞ்சல்  முகவரியின் ஊடாகவும் அல்லது தபால் மூலமாக, இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்
இல. 249இ2/1, நாவலவீதி, ராஜகிரிய என்ற முகவரிக்கும் மேலதிக விபரங்களுக்கு 0776653694 / 0117209511 என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X