2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.சி.அன்சார்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளி பிரதான வீதியில் சனிக்கிழமை (10) மாலை மோட்டார் சைக்கிளும் வானும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாவடிப்பள்ளி ஜலால்தீன்புரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய  எம்.பாசிமுகமட் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதில்; காயமடைந்தவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைதீவுப் பிரதேசத்திலிருந்து மாவடிப்பள்ளி பிரதேசம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும்  பயணித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வானுடன் மோதியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X