2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊறணிப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பாணமைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணமைப் பிரதேசத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில்; கலந்துகொண்டு விட்டு திருக்கோவில் பிரதேசம் நோக்கி இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது, வீதியில் நின்ற எருமை மாட்டுடன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில், வீதி அருகிலிருந்த கம்பி ஒன்றுடன் இவர்கள் மோதுண்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்று சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் அவ்வீதியால் சென்ற இராணுவத்தினர் இவர்களை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X