2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் சிறுவன் பலி; மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா        

பதியத்தலாவை பிரதேசத்தில் சனிக்கிழமை (1) இரண்டு தனியார் பஸ்கள் போட்டியிட்டுக்கொண்டு சென்ற நிலையில், ஒரு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதியதில் சேரன்கடப் பகுதியைச்; சேர்ந்த 4 வயதுச் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியானதுடன், சாரதி உட்பட பெண்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில்,  மகா ஓய அரசினர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போட்டியிட்டுக்கொண்டு சென்ற மற்றைய பஸ் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஒரு பஸ்ஸை மற்றைய பஸ் முந்திக்கொண்டு செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து சம்பவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X