2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் பலி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று(14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி விபத்தில் உயிரிழந்த பெண் பாலமுனை, கடற்கரை வீதியைச் சேர்ந்த சம்சுதீன் அதபியா (வயது 55) ஆவார்.  
பாலமுனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் மகனுடன் பின் ஆசனத்தில்; இருந்து சென்றபோது அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X