Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
இந்துக்களிடையே ஒற்றுமையையும் எழுச்சியையும் விழிப்புணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலமானது, வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்துக்கான பாதயாத்திரையை மூன்றாவது வருடமாக நாளை செவ்வாக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக குருகுலப் பணிப்பாளர் கண.இராசரெத்தினம் தெரிவித்தார்.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய திருத்தலத்தில் இருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரையானது முதல் நாள், அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடையவுள்ளது. மறுநாள் காலை கல்முனை நோக்கி பயணத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் தொடர்ந்து கல்லாறு, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, செங்கலடி ஊடாக வெருகலம் பதியை தீர்த்தோட்சவத்துக்கு முன்னதாக சென்றடைய திட்டமிட்டுள்ளதாக குருகுலப் பணிப்பாளர் மேலும் கூறினார்
தென்திசை கதிர்காமம் பாதயாத்திரை முருகபக்த அடியார்களுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று வடக்கு நோக்கிய வெருகலம் பதிக்கான பாதயாத்திரையும் முக்கியமாக அமைந்துள்ளது.
இப்பாதயாத்திரையில் இணைந்துகொள்ளும் அடியார்கள் தங்கள் பகுதி ஆலயங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
28 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
1 hours ago