2025 மே 22, வியாழக்கிழமை

விருது வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

இலங்கை மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில், சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தபால் நிலைய கேட்போர் கூடத்தில், அமைப்பின் நிர்வாக ஆளுநர் எப்.எம்.சரீப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சம்மாந்துறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருக்கு கலை,இலக்கிய,ஆய்வு மற்றும் சமூக சேவைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஸாத் நிஜாமுடீன் ஜலீல் ஜீக்கு பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.

இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.என்.அன்வர், வடமேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மது பாயிஸ் ஆகியோருடன் அமைப்பின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X