2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விவசாயிகள் மத்தியிலான முறுகல் சுமூக நிலைக்கு வந்தது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் வேரன்கெட்டகொட்ட பிரதேசத்தில் நெல் கொள்வனவின்போது, விவசாயிகள் மத்தியில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட முறுகல் நிலை அமைச்சர் தயா கமகேயின் தலையீட்டால் சுமூக நிலைக்கு வந்தது.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள நெல் கொள்வனவு நிலையத்தில் முதலாளி வர்க்கத்தினரின் நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் சிறிய, நடுத்தர விவசாயிகள் இதன் மூலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சில விவசாயிகள் தங்களின் நெல்லை சந்தைப்படுத்துவதற்காக நான்கு, ஜந்து நாட்கள் காத்திருந்ததாகவும் இதன்போது தெரிவித்தனர்.

இது தொடர்பில் நெல் கொள்வனவு அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், இப்பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு பணித்தார்.

மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தனிப்பட்ட முறையில் தலையீடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும்  அமைச்சர் தயா கமகேயின் ஆதரவுடன் தீர்ப்பதற்காக நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களில் எடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் திசாநாயக்க கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X