Editorial / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில், வி.சுகிர்தகுமார்
கல்முனை பிரதேசத்தின் தெற்கேயுள்ள தரவைப்பிள்ளையார் கோவிலையும் வடக்கே பெரியநீலாவணை கிராமத்தையும் மேற்கே சேனைக்குடியிருப்பையும் மையமாக வைத்து தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதான நகர சபை ஒன்றைப் புதிதாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வாழ் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள சுமங்கலி மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிதாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்தல் தொடர்பான திட்ட முன் மொழிவுகளை முன்வைக்கமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய கல்முனையில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பல திட்டங்களை முன் மொழிந்து வருகின்றனர்.
கல்முனை என்பது தமிழர்களின் பூர்வீகத் தாயகமாகும். இங்கு 82 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். தமிழர்களின் பிரதேசத்துக்குள் முஸ்லிம்களின் வியாபாரஸ்தாபனங்கள் மட்டுமே உள்ளடங்குகின்றன.
“கல்முனை என்பது வேறு, கல்முனைக்குடி என்பது வேறாகும். இதை நாம் நன்கு உணரவேண்டும்.
“சில வங்குரோத்து அரசியல்வாதிகள், இந்த கல்முனைக்குடியை கல்முனையாக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
“தற்போது கல்முனையை 4 ஆக பிரிக்கவேண்டுமென, முஸ்லிம் தரப்புகளால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கல்முனையை நான்காக பிரிக்கின்றபோது, இங்குள்ள தமிழர்களின் உரிமை, சுதந்திரம் என்பன மறுக்கப்படுகின்றது.
“இதிலிருந்து தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு நகர சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
“கல்முனைக்குடி – சாய்ந்தமருது பகுதியை ஒன்றிணைத்து ஒரு சபையும், கல்முனை தரவைக்கோவிலையும் பெரியநீலாவணையை எல்லையாகக் கொண்டு ஒரு சபையும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமங்களை உள்ளடக்கியதான ஒரு நகர சபை அமைக்கப்படவேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் நிலைப்பாடாகும்.
“கல்முனையில் மேற்கொள்ளப்படும் பிரதேச பிரிப்புக்கள் இனங்களுக்கு இடையில் மேலும் முரண்பாடுகளை ஏற்படுத்தலாம். இதனை கருத்திலெடுத்து, பிரதேச பிரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்.
“சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை ஒன்றை வழங்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது.
கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயமான இக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே, எங்களின் எதிர்பார்ப்பாகும்” என்றார்.
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago