2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வட-கிழக்கில் நிலையான தீர்வை ஏற்படுத்தவேண்டும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கிழக்கில் அதிகமானவர்கள் மீள்குடியேற்றப்படாமல் இருக்கின்ற பிரதேசம் அம்பாறை - திருக்கோவில் பிரதேசமாகும் எனவே, இப்பிரதேச மக்களின்  வாழ்வாதாரத்தை இனம்கண்டு அதனை பூர்த்தி செய்யப்பட வேண்டியது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளின் கடமையாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

திருக்கோவில் - கஞ்சிக்குடியாறு குளத்தின் அங்குரார்பண நிகழ்வு, வியாழக்கிழமை(18) கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.எஸ்.திலகராஜா தலைமையில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கல்லோயா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் பல பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கின்றது. ஆனால் இந்தப் பிரதேசம் அவ்வாறான திட்டத்தின் ஊடாக பயன் பெறுகின்ற பயனாளிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள் என்பதுடன்,இப்பிரதேசத்தில் இருக்கின்ற 3 குளங்களும் மாகாண நீர்பாசனத்துக்குரியது. 

கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாக இருப்பதுடன் கடந்த காலத்தில் பல போராட்டங்கள் நடந்த பிரதேசமாகும்.

இருந்தபோதும் போர் சூழல் காரணத்தினால் எந்தவிதமான அபிவிருத்தியையும் முன்னெடுக்கமுடியாத சூழல் இருந்தது. எனவே, தற்பொழுது கிழக்கு மாகாண அமைச்சை தமிழ்தேசய கூட்டமைப்பு பாரம் எடுத்ததன் பின்னர் எங்களுடைய அமைச்சர்கள் இங்கு நேரடியாக வருகை தந்தார்கள் விவசாயிகள் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த இடத்தில் இருந்து பொறியலாளர்களுடன் பேசி பல விடயங்களை முன்னெடுத்தார்கள் .அதன் ஒரு அங்கமாக இந்த குள புனரமைப்பு ஆகும்.

வரலாற்றைப் பார்த்தோமாயின் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்ந்தார்களே அந்த இடங்கள் இன்று தமிழர்களுடைய இடங்களா என்று கேட்கவேண்டிய நிலமை இருக்கின்றதுடன். கடந்த கால சம்பவங்களை பட்டியலிட்டு சொல்லமுடியும்.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே தமிழ். முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்துவாழ விரும்புகின்றோம் .நிலையான தீர்வை விரும்புகின்றோம். அதற்காக நாங்கள் ஏனையவர்களை பழிவாங்கவேண்டும் என்ற சிந்தனை இல்லை. எனவே, வட-கிழக்கில் நிலையான தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X