Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், கே.எல்.ரி.யுதாஜித்
“நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், தமிழ் மக்களுக்கு குறிப்பாக, வட, கிழக்கு மக்களுக்கு ஒரு சவாலான தேர்தலாக இதை நாங்கள் எதிர்நோக்குகின்றோம்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அவரது தேர்தல் அலுவலகம், திருகோணமலை வீதியில், இன்று (21) திறந்துவைக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கருணாகரம், “கடந்த காலங்களில், எமது இனம் அனுபவித்த துன்பங்கள் பற்றி நான் விவரிக்கவேண்டிய தேவையில்லை. அந்த அனர்த்தங்கள், துன்பியல் சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் கண்கூடாகக் கண்டவர்கள். அவைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும்.
“இந்த நாட்டில், தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழவேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேரம் பேசும் சக்தியாக இந்த நாட்டில் மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.
“சிங்களப் பெரும்பான்மை குறிப்பாக, தற்போதைய ஜனாதிபதியின் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு மிகவும் பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று இந்த நாட்டை வித்தியாசமான கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதற்கு பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர். அதை நாங்கள் தடுக்க வேண்டும்.
“இன்றுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் அரசியற் குரலாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago