2025 மே 03, சனிக்கிழமை

வட்டமடு மேய்சல்தரையில் விதிக்கப்பட்ட தடை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன், கனகராசா சரவணன்,வி.சுகிர்தகுமார்

வட்டமடு மேய்சல்தரைப் பகுதியில் கால்நடைகளைப் பராமரிப்பதற்காக வன இலாகா அதிகாரிகளால் இதுவரைகாலமும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க தெரிவித்தார்.

வன இலாகாப் பிரிவின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தை ஆலையடிவேம்புப் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் செவ்வாய்க்கிழமை (20) முற்றுகை இட்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினர்.

இதன் பின்னர் வன இலாகாப் பிரிவின் அம்பாறை மாவட்டக் காரியாலய அதிகாரி ஏ.ஆர்.எம்.முனசிங்கவை வட்டமடுப் பிரதேச கால்நடை சங்கத் தலைவர் ஆ.முருகன், அதன்  செயலாளர் எஸ்..புஸ்பராஜா உள்ளிட்டோர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, தங்களின் கால்நடைகளுக்கான பிரச்சினை தொடர்பில் இவர்கள் எடுத்துக்கூறினர்.

இதன்போது, தீர்வு காணப்படாததைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரை இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
வட்டமடு மேய்ச்சல்தரைப் பகுதிக்குள் கால்நடைகள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால்,  கால்நடைகள் திசை கெட்டு  காடுகளில் அலைவதுடன், கால்நடைகளுக்கு துப்பாக்கிச் சூடுகளும் மேற்கொள்ளப்படுவதாக வட்டமடுப் பிரதேச கால்நடை சங்கத் தலைவரும் செயலாளரும் எடுத்துக்கூறினர்.

இதனை அடுத்து, வட்டமடு மேய்ச்சல்தரைப் பகுதியில் சிறு குழுவினர்களாக இணைந்து பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளைப் பராமரிக்க அனுமதி அளிப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X