Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
றாசிக் நபாயிஸ்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமாக, 'வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி' எனும் கருப்பொருளில், சமயத் தலைவர்களினது சமாதான யாத்திரை, அம்பாறை - அக்கரைப்பற்றை வந்தடைந்தது.
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில், அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் றுஹூனு லங்கா அமைப்பு ஆகிய இணைந்து இந்த சமாதான யாத்திரையை ஏற்பாடு செய்திருந்தன.
தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.யூ.உவைஸ் மதானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் சுமாது வீரவர்ண, திட்ட உத்தியோகத்தர் எஸ். வத்சலா மற்றும் சர்வமதக் குழுவின் தலைவர் எஸ்.ஹாசிம், றுஹூனு லங்கா அமமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஜவ்பர் மற்றும் சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, சமயத்தலைவர்களுக்கிடையிலான கருத்துப்பரிமாறல்கள் நடைபெற்றதுடன், இரு குழுவினர்களுக்கிடையிலான சமய, கலை, கலாசாரம், பாரம்பாரியம் தொடர்பிலான அறிமுகமும் நடைபெற்றன.
மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு மற்றும் ஏனையவர்களுடன் சகோதரத்துவத்தை பகிர்ந்து கொள்ளல் போன்றனவை மூலம் இலங்கையில், பன்மைத்துவ சமுதாயத்தை வலுவூட்டுவதுடன் தேசத்தின் அமைதிக்கும் என்றும் பாடுபடுவோமென இதன்போது வலிறுத்தப்பட்டு, இலங்கையின் மாதிரிப் படத்தில் அனைத்து இன மக்களினாலும் அமைதி, சமாதானத்தை கட்டியயெழுப்பும் வகையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago