எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை – அட்டாளைச்சேனை ஊர்க்கரை வடிகான் நிர்மாணிப்புக்காக அனர்த்த முகாமைத்துவ, பொது நிர்வாக அமைச்சால் சுமார் 22 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தைக் குறைக்கும் முகமாக இவ் வடிகான் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், கூறினார்.
ஊர்க்கரை வடிகான் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுமார் 02 ஆயிரத்தி 500 குடும்பங்கள் மழை காலங்களில் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், தெரிவித்தார்.
இந்த ஊர்க்கரை வடிகான் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், அட்டாளைச்சேனை 05ஆம், 09ஆம், 03ஆம், 11ஆம், 12ஆம் பிரிவுகளில் ஏற்படும் வெள்ள அபாயம் குறையுமெனவும், உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
11 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
32 minute ago
1 hours ago