2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’வட்ஸ்அப்’ பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம் முதலிடம்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடனான மாகாண கல்விப் பணிப்பாளரின் 'வட்ஸ்அப்' குழும பதிலளிப்பில், சம்மாந்துறை வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 121 தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் அதற்கு உடனடியாகப் பதிலளித்த வலயக் கல்விப் பணிப்பாளர் வரிசையில் அதிகூடிய 102 தகவல்களுக்குப் பதிலளித்த சம்மாந்துறை வலயம் முதலிடம் பெற்றுள்ளது.

அதற்காக, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இரண்டாமிடத்தில் 90 தகவல்களுக்குப் பதிலளித்து கல்முனை வலயமும்  மூன்றாமிடத்தில் 85 தகவல்களுக்குப் பதிலளித்து திருக்கோவில் வலயமும் திகழ்கின்றன.

76 தகவல்களுக்குப் பதிலளித்த கல்குடா, மட்டு.மத்தி வலயமும் நான்காம் இடத்தைப்பெற 74க்குப் பதிலளித்து மட்டு.மேற்கு வலயம் 6ஆம் இடத்தைப் பெற்றது.

ஏனைய வலயங்கள் அடுத்தடுத்த கட்டங்களில் பெற ஆகக்குறைந்த பதிலளிப்பை அதாவது 15 க்குப் பதிலளித்த திருகோணமலை வலயம் இறுதி ஸ்தானத்தில் அதாவது 17ஆவது இடத்தில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .