Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில் விறகுக் கட்டை தலையில் வைத்துச் சுமந்து சென்ற வயோதிபப் பெண்ணொருவர், வடிகானுக்குள் விழுந்து மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி ரமேஸ்புரம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த தாமோதரம் யோகநாயகி (வயது 65) என்பவரே இவ்வாறு திங்கட்கிழமை இரவு மரணத்தைத் தழுவியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்த வயோதிபப் பெண் பதுளை வீதியிலுள்ள பங்குடாவெளிக்குச் சென்று விறகு சேகரித்து விட்டு வீடு திரும்பும்போது வடிகானுக்குள் விழுந்து மரணித்துக் கிடந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
28 minute ago
28 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
28 minute ago
41 minute ago
52 minute ago