2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

வயல்வெளியைத் துப்பரவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 06 முஸ்லிம்களும் 11 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டமடு பிரதேசம், நீண்ட காலமாக மேய்ச்சத் தரையா அல்லது வேளாண்மை செய்யும் காணியா என பெரும் சர்ச்சை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .