2025 மே 15, வியாழக்கிழமை

வரம்பு பயிர்ச்செய்கை வெற்றியளிப்பு

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

வரம்பு பயிர்ச்செய்கைத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதாக, அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் வெண்டி, கத்தரி, பயறு, கீரை போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு,  சிறந்த அறுவடை கிடைத்துவருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், மனைப்பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், நெற்செய்கை வயல் வரம்புகளில் உப உணவுப் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அம்பாறை - நிந்தவுர்  விவசாய விரிவாக்கற் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில், இன்று (17) நடைபெற்ற அறுவடை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயகவின்  விசேட பணிப்புரையின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வரம்பு பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு, விவசாய திணைக்களம் விவசாயிகளுக்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .